ஈரானிய தூதுவரை தாக்கிய வர்த்தகருக்கு பிணை !இலங்கைக்கான ஈரான் தூதுவரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய வர்த்தகர் இன்று கோட்டை நீதவான் கோசல சேனாதீர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து இந்நாட்டிற்கான ஈரானிய தூதுவரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.