பாணந்துறை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (13) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
பாணந்துறை - அலோபாமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் பாணந்துறை கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் அங்கு கடமையிலிருந்த பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இவர்களைக் காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.