இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று உகந்தை முருகன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 22ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. முருக பக்தர்கள் பாத யாத்திரையாக உகந்தை வரை சென்று அங்கிருந்து காட்டுப்பாதை ஊடாக கதிர்காமத்தைச் சென்றடைவார்கள் .