விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பில் அறிவிப்பு !


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் மற்றும் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

குறித்த கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் 14.06.2024 அன்று கிடைக்கப்பெற உள்ளதாகவும், அந்த அறிக்கை அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கேற்ப கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.