அடுத்த வாரம் ஆரம்பமாகும் 'அஸ்வெசும' இரண்டாம் கட்டம் பணிகள் !ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் 'அஸ்வெசும' வேலைத் திட்டத்தின் முதல் கட்டத்தில் தகுதிபெற்ற 18 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு மேலதிகமாக இரண்டாம் கட்டத்தில் மேலும் 450,924 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இவற்றில், நலன்புரிச் நன்மைகளைப் பெறத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து, தகவல் சரிபார்க்கும் பணிகள் ஜூலை 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.