தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு !




க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் 12 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று  பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். அத்தோடு 5 மாணவர்கள் 8A சித்திகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை அதிபர் K.கங்காதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு விழாவில் , பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .