நாங்கள் சளைத்தவர்கள் அல்ல கொழும்பில் தனித்துப் போட்டி : டக்ளஸ் தேவானந்தா!


சளைத்தவர்கள் அல்ல நாம், சவால்களை தனித்துவமாகவே சந்தித்தவர்கள் நாங்கள். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலும் களம் காணத் தயாராகி வருகிறோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில், நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வலிவடக்கு மாவிட்டபுரம் மாவை கலட்டி கிராம மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜே.வி.பியானது ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு தேசிய நீரோட்டத்தில் இணைந்து ஜனநாயக வழிமுறைக்கு வந்து ஆட்சியை கைப்பற்றியிருக்கிறார்கள்.

நாட்டின் புதிய ஆட்சியாளர்களுக்கும் ஈ.பி.டி.பி கட்சிக்கும் இடையில் கொள்கைகளில் பாரிய வேறுபாடுகள் இல்லை.

இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவர்கள் அதுபோல ஈ.பி.டி.பியும் இடதுசாரி பாரம்பரியத்திலிருந்து வந்திருக்கிறது.

இந்தப் பாராளுமன்றத் தேர்தலிலும் வென்று இம்முறையும் பாராளுமன்றம் செல்வோம் என தெரிவித்ததுடன், இம்முறை நாங்கள் வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலும் கிழக்கிலுள்ள 3 மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.