எலிக்காய்ச்சலால் இதுவரை 22 பேர் பலி – 1882 பேர் பாதிப்பு !


இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 1882 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்இ இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

எலிக்காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் சிறுநீரகம், இதயம் மற்றும் மூளை ஆகிய உறுப்புகள் செயலிழந்து மரணம் கூட ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, கிரியெல்ல, எலபாத, பெல்மடுல்ல, ஓபநாயக்க, நிவித்திகல, கலவான மற்றும் கல்தொட்ட ஆகிய இடங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகும்.எலிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 22 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

எலிக் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பு மருந்துகளைவேலைகளுக்காக செல்பவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாக பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 2023 இல் எலிக் காய்ச்சலால் 1,400 பேர் பாதிக்கப்பட்டிருந்ததுடன், 2024 இல் அந்த எண்ணிக்கை 1882 ஆக அதிகரித்துள்ளது.