மட்டக்களப்பு நகரில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி உயர்தர பரீட்சை தொடர்பான பிரதான நிலையமாக செயற்பட்டுவரும் நிலையில் அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த 57வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று குறித்த பொலிஸ் அதிகாரி பாடசாலையில் கடமையில் இருந்துள்ளதாகவும், இதன்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








.jpeg)


.jpeg)
