வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!


10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,371 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,349 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1,825 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1,399 வாக்குகள்
வன்னி- சுயேட்சைக் குழு (IND07-11) - 639