பாடசாலை ஒன்றில் விபரீதத்தில் முடிந்த வேடிக்கைச் செயல் !


பெரியவர்களாகிய நாம், நம் பிள்ளைகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் சில செயல்களின் தீவிர தன்மையை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.

பிள்ளைகளின் இத்தகைய பாதுகாப்பற்ற செயல்களால் ஏற்படவிருந்த பாரிய துயரச் சம்பவம் மயிரிழையில் தவிர்க்கப்பட்ட செய்தி ஒன்று கம்பளை கல்வி வலயத்திலிருந்து அத தெரணவுக்கு தெரியவந்துள்ளது.

கம்பளை கல்வி வலயத்தில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் ஐந்தாம் தர மாணவர்கள் குழு ஒன்று, ஓவியம் தீட்டும் திட்டத்திற்காக கொண்டு வரப்பட்ட தின்னரில் (tinner) எஞ்சி இருந்ததை தரையில் கொட்டி தீ வைத்து வேடிக்கை பார்த்துள்ளனர்.

ஒரு மாணவன் சிறிது தின்னரை போத்தலில் எடுத்து தனது பாடசாலை பையில் வைப்பதைப் பார்த்த மற்றொரு மாணவன், இது குறித்து ஒரு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் கோபமடைந்த இரண்டு மாணவர்கள், தின்னர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் தீ வைத்து, சம்பந்தப்பட்ட மாணவர் மீது வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிந்து கொண்டிருந்த தின்னர் மாணவனின் காலில் விழுந்த நிலையில், மாணவர் அங்கிருந்து ஓடும்போது, ​​மற்றொரு வகுப்பில் இருந்த ஆசிரியர் மாணவனைத் தடுத்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தார்.

தீ விபத்தில் மாணவனின் கால்கள் எரிந்த நிலையில், அவர் கம்பளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்த துயர சம்பவத்தை எதிர்கொண்ட மாணவர் கூறுகையில்

"அன்று எங்கள் வகுப்பு ஆசிரியர் வரவில்லை. எங்கள் வகுப்புத் நண்பர்கள் பாடசாலையில் இருந்த தின்னர் கேனை எடுத்து தரையில் வீசி விளையாடினர்.

அதில் ஒருவர் பெயிண்ட் டப்பாவில் தினரை ஊற்றி, பையில் போட்டு, வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக மறைத்து வைத்தர்.

நான் அதைப் பார்த்து முறைப்பாடு செய்தேன். பின்னர் அவர்கள் என்னை கட்டிக்கொடுத்ததாக திட்டினர்.

பின்னர் அவர்கள் பெயிண்ட் டப்பாவில் தினரை ஊற்றி, அதைப் பற்றவைத்து, என் முகத்தில் எறிந்தனர். அது மேசையில் பட்டு கீழே விழுந்து இரண்டு கால்களிலும் தீப்பற்றியது.

பின்னர், நான் அங்கிருந்து ஓடிக்கொண்டிருந்த போது, ​​நான்காம் வகுப்பு ஆசிரியர் பாடசாலை பை ஒன்றை எடுத்து என் காலில் அடித்து, ஆசிரியரின் தண்ணீர் போத்தலை எடுத்து, கால்களின் மீது தண்ணீரை ஊற்றி, தீயை அணைத்தார்.

என் கால்கள் எரிகிறது, என்னால் அதைத் தாங்க முடியவில்லை. "எனக்குப் பாடசாலை கூட போக வழி இல்லை." என்றார்.

இது தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் குழு மற்றும் கம்பளை வைத்தியசாலை, பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ‍

பாடசாலைகளில் பிள்ளைகளின் செயல்பாடுகளில் ஆசிரியர்கள் உட்பட பெரியவர்கள் கவனம் செலுத்தாமல் இருப்பது எப்படி கடுமையான துயரங்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு தெளிவான எடுத்துக்காட்டு ஆகும்.