கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமும் முத்துச் சப்பர பவனியும் !


(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமும் முத்துச்சப்ற பவனியும் நேற்று முன்தினம் மாலை (11) கல்முனை நகரில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

தரவை சித்தி விநாயகப் பெருமான் யானை மேல் அமர்ந்திருந்து வலம் வந்தார். கல்முனை பிரதான நகர் ஊடாக பாண்டிருப்பு வரையும் இடம் பெற்ற இந்த வீதி உலாவில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜெ.அதிசயராஜ் உட்பட ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கலாசார பண்பாடுகளை பிரதிபலிக்கும் மயில் நடனம்,கோலாட்டம், அபிநய ஆட்டங்களும் இடம்பெற்றன.

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த முதலாம் திகதி (01) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று புதன்கிழமை (12) தீர்த்தோற்சவத்துடன் கொடி இறக்கப்பட்டு வருடாந்த உற்சவம் இனிதே நிறைவுபெற்றது