அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (27) மேலும் குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 295.44 ரூபாவாகவும், 303.92 ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் (26) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுதியானது 295.24 ரூபாவாகவும், 303.70 ரூபாவாகவும் உள்ளது.
எனினும், வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் வளைகுடா நாணயங்களுக்கு எதிராக அதன் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது