லபுக்கலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த மூன்று சந்தேக நபர்கள், உரிமையாளருக்கு செழிப்பைத் தரும் என கூறி, இரத்தினக் கல்லை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர்.
எனினும், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இரத்தினக் கல்லை வாங்குபவர் போன்று ஒருவரை அனுப்பி, அவர் பேரம் பேசி, இரத்தினத்தின் விலையை ரூ.500 மில்லியனில் இருந்து ரூ.01 மில்லியனாகக் குறைத்துள்ளர்.
இந்த இரத்தினம் உண்மையான விலையுயர்ந்த கல்லா அல்லது போலியானதா என்பது குறித்த அறிக்கைக்காக தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் அதிகாரசபையிடம் அனுப்பப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
40 முதல் 50 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் வத்தேகம மற்றும் மடவல பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவார்கள்.
தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் அதிகாரசபையால் இரத்தினக் கற்கள் வியாபாரம் செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை சந்தேக நபர்கள் வைத்திருக்கவில்லை என சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.