
கல்வி மறுசீரமைப்புக்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும், கல்வி சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றக் குழு கோரியுள்ளது.
அத்துடன், கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை குழுவில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் பொது மக்களுக்கு அது தொடர்பில் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவான புரிதலை வழங்குவதற்கான, பொதுவானதொரு விழிப்புணர்வு பிரசாரம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஊவா மாகாணத்தைத் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களில் கல்வி அதிகாரிகளுக்கு இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.