(சித்தா)
2025 ஆம் கல்வியாண்டுக்கான க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கு எதிர்வரும் மாசி 2026 இல் நடைபெறவிருக்கும் க.பொ.த. சாதாரண பரீட்சையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப (ICT) பாடத்தில் தோற்றவிருக்கும் பட்டிருப்பு வலயத்தின் போரதீவுக் கோட்ட மாணவர்களின் நலன் கருதி எதுவித கொடுப்பனவுமின்றி இலவசமான கருத்தரங்குகள் தொழிநுட்ப மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலைய முகாமையாளர் ரூபினி டேவிட் அவர்களால் கடந்த 05.08.2025 (செவ்வாய்கிழமை), 06.08.2025 (புதன்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் தகவல் தொழிநுட்ப மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையத்தில் (Information Technology and Distance Learning Hub) நடைபெற்றது. இதில் போரதீவுக் கோட்ட பத்து பாடசாலைகளைச் சேர்ந்த 59 மாணவர்கள் பங்குபற்றினர். தொடர்பாடல் தொழினுட்ப (ICT) பாடத்திற்கான சேவைக்கால ஆலோசகர் இல்லாத பட்சத்திலும் கூட மாணவர்களின் நலன்கருதி சேவை நோக்கோடு வளமுகாமையாளர் ரூபினி டேவிட் இச் செயற்பாட்டை முன்னெடுத்தமையையிட்டு கல்விச் சமூகம் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.