நெல் வகைகளின் கொள்வனவு விலை !


நாட்டில் இம்முறை, சிறுபோகத்தில் இதுவரை 11,000 மெற்றிக் டொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்தே குறித்த தொகை நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அம்பாறை மாவட்டத்தில் இருந்து அதிகளவான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த கூறியுள்ளார்.

இதற்கமைய, நாடு நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாய்க்கும், சம்பா நெல் ஒரு கிலோகிராம் 125 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் 132 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.