திருக்கோவில் பிரதேச மக்கள் கண்களினை விற்று ஓவியம் வாங்கப்போகின்றார்களா - முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் விசனம்



திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுதொடர்பாக காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிடுகையில் கடந்தகாலங்களில் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்விற்கு எதிரான எமது மக்கள் , இளைஞர்கள் சமூக அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும்,இளம் சட்டத்தரணிகள் இனைந்ததாக வலுவான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் தடுத்துநிறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் இல்மனைட் கம்பனியினால் மறைமுகமாக அதிகமான மக்களிடத்தே எதிர்ப்பினை தனிப்பதற்காக உளவியல் சார்ந்த மாற்றங்களினை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்கமுடிகின்றது.

மக்களுக்கானது வாழ்வாதார உதவிகள் , பாடசாலைகளுக்கு உதவிகள் , விவசாயம் உதவிகள், மீனவர்களுக்கு உதவிகள் பாதைகள், பாலங்கள் என்ற போர்வையில் ஒரு மாயவலையினை மக்கள் மீது இந்த இல்மனைட் கம்பனி வீசியுள்ளது இவ்வாறான விடயங்களை எமது மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும்..

இந்த இல்மனைட் அகழ்வினை தடுப்பதற்கான விடயத்தில் யார் மறுத்தாலும் கடந்த காலங்களில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான க.கோடீஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் ,எமது கட்சி தலைமைகள் திருக்கோவில் தவிசாளர் , உறுப்பினர்கள் மற்றும் காரைதீவு தவிசாளராகிய என்னாலும் இவ்விடயத்தினை தடுப்பதற்கான அழுத்தங்களும் நடவடிக்கைகள், பல்வேறுபட்ட முயற்சிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தது

தற்போது எமது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் இதனை தடுப்பதற்கான முழுமுயற்சியினையும் மேற்கொண்டு வருகிறார் கடந்த அம்பாறையில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்திலும் இதற்கான தடையுத்தரவு பிரேரனையினை சமர்ப்பித்து தடைக்கான அனுமதிபெற்றிருந்தார் தற்போது தற்போதைய ஜனாதிபதியிடமும் இதனை தடுப்பதற்கான மகஜர் கையளிக்கவுள்ளார்.

ஆட்சியானது மக்களுக்கானதே தற்போது திருக்கோவில் பிரதேசத்தில் ஆட்சியானது மாற்றமுற்றுள்ளது இந்த ஆட்சியானது யாருக்காக மாற்றப்பட்டுள்ளது என்பதனை இல்மனைட் அகழ்வு இடம்பெறுமானால் மக்கள் புரிந்துகொள்ளக்கூடியவாறு இருக்கும்.

திருக்கோவில் பிரதேசத்தில் இதுவரை காலமும் எமது கட்சியின் ஆட்சி நிலவியபோது எமது மக்கள் பிரதிநிகளால் தடுத்துநிறுத்தப்பட்ட இல்மனைட் அகழ்வு தற்போது மேற்கொள்ளப்டுமானால் இதற்கு பொறுப்பாளி இப்பிரதேச ஆட்சியாளர்களேயாவர்.

தற்போதைய காலகட்டத்தில் இல்மனைட் கம்பனியினது செயற்பாடுகள் துரிதகதியில் காணப்படுவதானல் இந்த புதுமுகங்கள் மீது மக்களுக்கு பல சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.

இந்த இல்மனைட் அகழ்வினை தடுத்து நிறுத்த வலுவான மக்கள் எதிர்ப்பும் வழிநாடாத்தக்கூடிய அரசியல் தலைமைகளும் முன்வருதல் அவசியம்

கடந்தகால தேர்தல் மேடைகளில் இப்பிரதேசத்தில் இந்த புதுமுகங்கள் இல்மனைட் தொடர்பாக ஒருமாத காலத்தில் ஆய்வு செய்வோம் ,வழக்குதொடர்வோம் என்றெல்லாம் வாக்குறுதியளித்ததனை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தோம்.இது தொடர்பான இவர்களது கரிசனை எந்தளவிலுள்ளது என்பதனை மக்கள் தற்போது புரிந்துகொள்ள வேண்டும்.

எமது திருக்கோவில் பிரதேச மக்களுக்காக போராட நான் தயாராக இருக்கிறேன் எக்காலத்திலும் எமது மக்களது இல்மனைட் தொடர்பான எதிர்ப்பு குறைந்து விடக்கூடாது என கருத்து தெரிவித்தார்.