
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்து மூன்று நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பெண்களை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, கொள்ளுப்பிட்டியில் காலி வீதியில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








.jpeg)



