ராகமை , வல்பொல, புனிலவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்டத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ராகமையைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதியின் தலைமையில் இந்த பேஸ்புக் களியாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜா-எல, கம்பஹா, கிரிபத்கொடை, களனி மற்றும் சீதுவை ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


.jpg)





.jpeg)
.jpeg)
.jpg)


