தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 22 ஆண்டுகள் வாழ்ந்த கிப்பன் குரங்கு உயிரிழப்பு !


தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 22 ஆண்டுகளாக வாழ்ந்த வெள்ளைக் கை கொண்ட கிப்பன் வகை குரங்கு உயிரிழந்துவிட்டதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு செக் குடியரசில் இருந்து அதன் பெண் துணையுடன், இந்த கிப்பன் குரங்கு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த கிப்பன் குரங்கு கடந்த 17ஆம் திகதி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அண்மையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த கிப்பன் குரங்கின் உடற்கூற்று பரிசோதனை தொடர்பான அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.