அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நுண், சிறு, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்க ‘RE-MSME’ எனும் விசேட கடன் சலுகைத் திட்டத்தை விரிவுபடுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதன்கீழ், நுண் தொழில்முயற்சியாளர்களுக்கு 250,000 ரூபாவும், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு 1 மில்லியன் ரூபாவும், பாரிய வர்த்தகர்களுக்கு 25 மில்லியன் ரூபா வரையும் 3% வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும்.
இதற்காக 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.








.jpeg)

.jpeg)


.jpg)