சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற பிரித்தானிய பெண் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து படுகாயம் !


பதுளை - எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற பிரித்தானிய பெண் ஒருவர் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த பிரித்தானிய பெண் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.