சட்டவிரோத சிகரெட்டுகளுடன் துறைமுக ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது



வெல்லம்பிட்டிய பகுதியில் 330 மில்லியன் ரூபாய் (33 கோடி) பெறுமதியான, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 20 இலட்சத்து 30 ஆயிரம் சிகரெட்டுகளை மதுவரித் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் துறைமுக அதிகாரசபையின் ஊழியர்கள் மூவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.