74 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவர் கைது



புத்தளம் - வனாத்தவில்லு பிரதேசத்தில் 74 கிலோ 500 கிராம் மாட்டிறைச்சியுடன் இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக நிலவும் மாட்டிறைச்சி கடத்தல் தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் வனாத்தவில்லு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 02 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.