போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 846 பேர் கைது




போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 846 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெரோயின், ஐஸ், கொக்கேய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 10 பேர் குறித்து மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

அத்துடன், போதைப்பொருளுக்கு அடிமையான 16 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.