
கலவானை - துனுமாகல பகுதியில், புதையல் தோண்டிய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (26) மதியம், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கலவானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து அகழ்வாராய்ச்சி உபகரணங்கள் மற்றும் பலிபீடப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 25 மற்றும் 46 வயதுடைய, நாவலகந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கலவானை பொலிஸர், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




.jpeg)





.webp)

