கிளிநொச்சியில் பெருமளவு கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது


கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியில் பெருமளவு கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை (29) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 131 கிலோகிராம் 13 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.