
(ரவி ப்ரியா)
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலை நிகழ்வுகளும் வெகு சிறப்பாக பெரியகல்லாறு பொது நூலக மண்டபத்தில் வாசகர் வட்ட தலைவர் கே.சுதர்சன் தலைமையில் சனியன்று நடைபெற்றது.
பிரதம விருந்தினராக மண்முனை தென் எருவில் பற்று பிரதே சபையின் தவிசாளர் மே.வினோராஜ் கலந்து கொண்டனர்.விஷேட அதிதிகளாக இந்து மற்றும் கிறித்தவ ஆலயங்களின் தலைவர்கள் மற்றும் குருமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அழைப்பு அதிதிகளாக ஆறு பாடசாலைகளின் அதிபர்கள் குறிப்பிடப்பட்டிருந்தும் ஒரேயொரு அதிபர் மட்டும் கலந்துகொண்டிருந்தார். குறித்த பாடசாலைகளின் பரிசுக்கான மாணவர்கள் முழுமையாக கலந்து கொண்டிருந்தனர்.
சம்பிரதாய நிகழ்வுகளை தொடர்ந்து கண்கவர் நடனப்பள்ளிகளின் மாணவர்களின் நடனங்கள் நிகழ்வுக்கு மெருகூட்ட பரிசளிப்பு விசேட நினைவுச் சின்னங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. அதிதிகள் உரை என்பன இடம்பெற்றன.
வாசகர் வட்ட தலைவர் உறுப்பினர்கள் மற்றும் நூலகர் றிஹான மற்றும் உத்தியோகத்தர்களின் அர்ப்பபணிப்பு திட்டமிடல் ஒழுங்கமைப்பு என்பன மிகவும் நேர்த்தியாக இருந்தது


.jpeg)





.jpeg)

.jpeg)









.jpg)
.webp)



