
2009 ஆம் ஆண்டில் களுத்துறை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் வஸ்கடுவ - பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் 6 கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







.jpeg)




