கம்பஹா - சீதுவை பகுதியில் களியாட்ட விடுதியொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்த 6 பேர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், குறித்த விடுதியின் முகாமையாளர், தொழிலதிபர், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் அடங்குவதாக மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது நடவடிக்கையின் போது ஆறு பெற்றோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்பேதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட முகாமையாளருக்கு எதிராக முன்னதாக நீர்கொழும்பு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இரண்டு வழக்குகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





.jpeg)





.webp)

