குருக்கள்மடம் சிங்கறெஜிமென்ட் இராணுவ முகாம் ஏற்பாட்டில் பெரியகல்லாறு மகா வித்தியாலயத்திற்கு நவீன கற்பித்தல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.




( ரவிப்ரியா)

பெரியகல்லாறு மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.சசிதரனிடம் நவீன கற்பித்தல் உபகரணத் தொகுதி மற்றும் சுத்திகரிப்பு கருவிகள் என்பன கையளிக்கும் சம்பிரதாய நிகழ்வு புதனன்று (17) வித்தியாலய மண்டபததில் நடைபெற்றது.

பெரியகல்லாற்றைச் சேர்ந்த வெளிநாடொன்றின் பிரஜையான அந்தநாட்டின் அரச உயர் பதவி வகிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத அபிமானி ஒருவரின் முழு அனுசரனையோடு 1.3 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் இந்த நிகழ்வில் குருக்கள்மடம் சிங்கறெஜிமென்ட் இராணுவ முகாம் 11வது வற்றாலியன் கட்டளை அதிகாரி வி.வலாகல்ல கலந்து கொண்டார். அத்துடன் மட்டக்களப்பு கல்லடி 243 விறிகேட் விறிகேடியர் கே.கலுபான அம்பாறை மல்வத்த தலைமைக்காரியாலய 24வது பிரிவு மேஜர் ஜெனரல் கே.டவிள்யு.ஜெயவீர மற்றும் புனானை 23வது பிரிவு தலைமைக்காரியாலய மெஜர் ஜெனரல் ஜிபிபி.குலதிலக ஆகியோரும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.