பொத்துவில் வனப்பகுதியில் கஞ்சா செய்கை முற்றுகை: துப்பாக்கிகளுடன் இருவர் கைது !



பொத்துவில் - பக்மிடியாவ வனப்பகுதியில் கஞ்சா செய்கைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று திங்கட்கிழமை (22) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படை சாஸ்திரவேலி முகாமின் அதிகாரிகள் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 01¼ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 03 கஞ்சா செய்கைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, 60,000 கஞ்சா செடிகள் மற்றும் இரண்டு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 30 மற்றும் 34 வயதுடைய, பக்மிடியாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.