றமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
றமழான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்களால் விசேட உணவாக உட்கொள்ளப்படும் பேரீச்சம்பழத்தை அவர்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக வருடாந்தம் இராஜதந்திர ரீதியாகவும், அமைப்புக்கள் மட்டத்திலும் மற்றும் தனிநபராகவும் நன்கொடையாக அல்லது அன்பளிப்பாக வழங்கப்படும்.
அவற்றை வெளிநாட்டு செலாவணி செலவாகாத வகையில் எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படல் வேண்டும். அடுத்துவரும் றமழான் நோன்புக் காலம் 2026.02.19 அன்று ஆரம்பித்து 2026.03.21 ஆம் திகதி முடிவடையவுள்ளது.
அதற்கமைய, றமழான் நோன்புக் காலத்தில் நன்கொடையாகவும் அன்பளிப்பாகவும் எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகையை வழங்குவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


.jpeg)





.jpeg)

.jpeg)


.jpg)