ஹம்பாந்தோட்டை - பூந்தல வனப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (26) மாலை, இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டை, வெலிஹட்ட சந்தி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றபோது காட்டு யானை தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





.jpeg)





.webp)

