2024 ஆம் ஆண்டு 36ஆம் இலக்க இலங்கை மின்சார(திருத்தம்) சட்டத்தின் 4 ஆம் உறுப்புரையின் பிரகாரம் தேசிய மின்சார கொள்கை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அந்த சட்டமூலம் https://energymin.gov.lk/ வலுசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்க விரும்புபவர்கள் 2026.01.09 ஆம் திகதி அல்லது அத்தினத்துக்கு முன்னர் neac@energymin.gov.lk மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ,
செயலாளர், வலுசக்தி அமைச்சு இல.437.காலி வீதி கொழும்பு 03 என்ற முகவரி ஊடாகவோ அல்லது 011 2574 753 என்ற தொலைநகல் ஊடாகவோ தமது யோசனைகளை அனுப்பி வைக்க முடியும்.
இவ்விடயம் தொடர்பில் 011 2574 922 (இறுதி இலக்கம் 509/ 510/403 ) ஊடாக அழைத்து மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.








.jpeg)

.jpeg)


