
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய 34 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (18) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சம்மாந்துறை பௌஸ்மாவத்தை வீதி மற்றும் மலையார் வீதி சந்திக்கும் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரைச் சோதனையிட்டபோது அவரிடமிருந்து ஒரு கிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் கைது நடவடிக்கையானது, கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பி. இஹலகே (P. Ihalage) தலைமையிலான அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







.jpeg)
.jpeg)
.jpg)


