நத்தார் தினத்தில் பொது மன்னிப்பை இழந்த கைதிகள் !


நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இம்முறை நத்தார் தினத்தன்று கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை.

இது தொடர்பாகசிறைச்சாலைத் திணைக்களத்திடம் வினவிய போது ,

இதற்குப் பதிலளித்த சிறைச்சாலைத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர், விடுவிக்கப்பட வேண்டிய கைதிகளின் பெயர்ப்பட்டியல் உரிய அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், கைதிகள் தொடர்பாக மேலும் சில அறிக்கைகளை அமைச்சு கோரியுள்ளதாகவும், அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, வரும் நாட்களில் நத்தார் தினத்திற்கான விசேட பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.