போரதீவுப்பற்று பிரதேச சபை நடாத்திய தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்.

(சித்தா)
மட்டக்களப்பு மாவட்டத்தின்  போரதீவுப்பற்று பிரதேச சபை மற்றும் பொது நூலகங்கள் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கடந்த 30.12.2025 ஆம் திகதி வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன்  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஆர்.கு. றிப்கா கலந்து சிறப்பிக்க,  சிறப்பு அதிதிகளாகப் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன், போரதீவுப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் த. கயசீலன்,  செயலாளர் சி. பகிரதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மாணவர்கள்இ ஆசிரியர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர். 
இந் நிகழ்வில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.