வவுனியா, ஈச்சங்குளம் - கருவேப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் கருவேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


.jpg)





.jpeg)
.jpeg)
.jpg)


