பாணந்துறை - காலி வீதியில் பணத்துக்காக மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பதாக பாணந்துறை வடக்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களான கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை, எகொடஉயன, பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18,19,20, 21 மற்றும் 22 வயதுடைய இனைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


.jpeg)





.jpeg)




