டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்குவதற்கான சுற்றுநிருபம் தொடர்பான விவாதத்தின்போது இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கருத்து தெரிவிக்கும்போது பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறுக்கிட்டார் இதன்போது “குட்டி நாயை போன்று குரைத்துக்கொண்டு இருக்கக் கூடாது என சிறீதரன் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா, ஒரு பாராளுமன்ற உறுப்பினரான இளங்குமரனை பார்த்து எவ்வாறு நாய் என கூறமுடியும்? என கேள்வி எழுப்பினார்.
படிப்பறிவு இருக்க வேண்டும், கைநாட்டு அரசியலை செய்யும் தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் தெரிவதில்லை என விமர்சித்திருந்தார்.
இதன்போது கடும் தொனியில் சிறீதரன் எம்.பி, உனக்கு படிப்பறிவு இருக்கிறதா? நாங்கள் கைநாட்டு என்றால் நீ கால்நாட்டா என கூறினார். இதன்போது சபையில் சலசலப்பு ஏற்பட்டது.


.jpeg)


.jpeg)





.webp)

