லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தங்கியுள்ள இடம் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கண்டுபிடித்து கைதுசெய்ய பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (30) கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்ட ஜொஹான் பெர்னாண்டோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.








.jpeg)

.jpeg)


.jpg)