
புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு பெண் சந்தேக நபர்களும் அகழ்வு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் 35 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட அநுராதபுரம், இனாமலுவ, மொரகொட மற்றும் கலேவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
பெண் சந்தேக நபர்கள் 36 மற்றும் 45 வயதுடைய மடாட்டுகம மற்றும் தேவிபுரம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












