பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வெளியேறும் முனையத்தில் (Departure Terminal) 4 தன்னியக்க பயணிகள் கதவுகளை (E-gates) பொருத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
‘தென்மேற்கு ஆசிய நாடுகளுக்கான தேசஎல்லைகள் சார்ந்த தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த வேலைத்திட்டத்தின்’ கீழ் , ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், 2026 ஆம் ஆண்டில் முழுமையாகச் செயற்படுத்தப்படும்.
ஏற்கனவே வருகை முனையத்தில் இக்கதவுகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியேறும் முனையத்திலும் இவை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
குறித்த கதவுகளின் ஊடாக வெகுவிரைவில் பயணிகள் விடுவிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
உள்வருகை முனையத்தில் பொருத்தப்பட்டுள்ள 4 தன்னியக்க பயணிகள் விடுவிப்புக் கதவுகளுக்குச் சமாந்தரமாக வெளியேறும் முனையத்திலும் 4 தன்னியக்க பயணிகள் விடுவிப்புக் கதவுகளைப் பொருத்துவதன் மூலம், ஒரே முறைமையின் கீழ் மிகவும் வினைத்திறனாகவும் சரியாகவும் பயணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமை கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.








.jpeg)

.jpeg)


.jpg)