
மதவாச்சி - உடும்புகலவத்த பகுதியில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (27) மாலை பதிவாகியுள்ளது.
துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த குறித்த நபர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் துப்பாக்கி வெடித்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.







.jpeg)




