தீயில் கருகிய நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு !



கொஸ்கம, முனமலேவத்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை (31) தீயில் கருகிய நிலையில் ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பாடசாலை ஆசிரியர் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இவர் ஹங்வெல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றி வரும் நிலையில் குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.