
இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் என்னிடம் கூறினார்கள் என யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நான் தமிழன், இந்து ஆனால் கையில் அஸ்கிரிய பீடத்தால் எனக்கு கட்டிய பிரித் நூலும், மகாநாயக்க தேரர் கட்டிய பிரித் நூலும் உள்ளன. மகாநாயக்க தேரர்களை சந்தித்து நான் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கதைத்தேன். ஆனால் இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலமே இருக்கும் என்றே அவர்கள் பதிலளித்தனர். இந்த அரசாங்கம் தமிழ், சிங்கள மக்களுக்கு வேண்டாமென்றாகிவிட்டது.
.இதேவேளை தகரங்கள் கழன்றிருந்தால் 20இலட்சம் ரூபா வழங்குவதாக கூறினார்கள். அதனை நம்பி நானும் இரண்டு தகடுகளை கழற்றினேன். அவ்வாறு பணம் கிடைக்காதாம். தகரம் மட்டுமல்ல உள்ளாடை வாங்கவும் பணமில்லாத நிலைமையே உள்ளது உங்களுக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலைமையே உள்ளது. நான் தமிழன். என்னை எந்தவொரு சிங்களவரும் கொல்ல மாட்டார் என்றார்.







.jpeg)
.jpeg)
.jpg)


