பொகவந்தலாவை - கிளினிவத்த பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று புதன்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



