
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள், இளைஞர்கள் என குழுக்களாக இணைந்து சிறிய மற்றும் பாரிய அளவிலான பட்டங்களை கட்டி பறக்க விட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு பல்வேறு வித்தியாசமான இராட்சத பட்டங்கள் பறக்க விடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றும் (7) வல்வெட்டித்துறை றெயின்போ விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் கூடி பாரிய பட்டங்களை பறக்க விட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது எதிர்பாராத விதமாக பட்டம் ஏற்றும் வடத்துடன் இளைஞன் ஒருவர் வான் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டமையினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவரது நண்பர்கள் விரைந்து செயற்பட்டு குறித்த இளைஞரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் வடமராட்சி பகுதியில் ஒருவர் பட்டத்துடன் பறந்த நிலையில் தாமே உந்திச் சென்று தரையிறங்கியிருந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானமை குறிப்பிடத்தக்கது.


